dayanidi315@yahoo.com | +91-9443720201 (India) | +968-98690795 (Oman)

Welcome to Doing English

உங்களுக்காக... உங்களோடு...

வணக்கம்.

உங்களுடைய தாய்மொழி தமிழா?
உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச, உரையாட, எழுத ஆசையா?
"ஆம்" எனில், இது உங்களுக்கான இணையத்தளம்.

இருநூற்றுநாற்பத்தியேழு எழுத்துக்களைக்கொண்ட தமிழில் பேச, எழுதத் தெரிந்த உங்களுக்கு, வெறும் இருபத்தியாறு எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஆங்கிலத்தில் ஏன் பேச முடியவில்லை? ஏன் எழுத முடியவில்லை?

ஒரேயொரு காரணம்தான். தமிழ் உங்களுடைய தாய் மொழி. ஆங்கிலம் வேற்றுமொழி. அவ்வளவே.

ஆங்கிலத்தில் பேசுவது சற்றுக் கடினம். அனால் சாதிக்கமுடியாதது அல்ல. உங்களாலும் ஆங்கிலத்தில் பேச முடியும்; எழுதமுடியும். நம்புங்கள்.

"நம்பிக்கைதான் செயலாகிறது; செயல்தான் வாழ்க்கையாகிறது."

ஒரு மொழியில் பேச, எழுத அந்த மொழியின் இலக்கணத்தை ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். இலக்கணத்தை முறையாகத் தெரிந்துக்கொள்ளாமலும் பேசமுடியும். ஆனால் அது மிகச்சரியானதாக இருக்காது.

இலக்கணம் என்பது வெறுக்கக்கூடிய "பாகற்காய்" அல்ல. முறையாகக் கற்றுக்கொண்டால், இனிக்கும் "பலாச்சுளை".

சொற்களை எவ்வாறு கையாள்வது?, சொற்றோடர்களை எப்படி அமைப்பது?, எந்தெந்தச் சொற்களை, எவ்வெவ்விடங்களில் பயன்படுத்துவது?, ஒரு கேள்வியை எவ்வாறு உருவாக்குவது?, அக்கேள்விக்கான சரியான பதிலை எப்படி அமைப்பது?

போன்ற பல்வேறு வினாக்களுக்கு, இலக்கணம் விடைதரும். தொடக்கத்தில், இலக்கணம் சற்றுக் கடினமாக இருக்கலாம்.

விதிகள் புரிந்துபோனால், எந்த விளையாட்டும் எளிதாகிவிடுகிறதல்லவா? அதேபோல, விதிகளைச் சரியாகக் கற்றுக்கொண்டால், இலக்கணமும் எளிதாகிவிடும். இலக்கணத்தை முறையாகக் கற்றுக்கொண்டுவிட்டால், மொழியைக் கையாள்வது மிகவும் எளிது.

இதற்காக இரண்டு பயிற்சித்திட்டங்களை (Courses) வகுத்திருக்கிறோம்.